headlines

img

ஒரு-பெண்ணை எழுதுகையில் - நவகவி

நான் - உன்னை எழுதுகிறேன்.
           நீ - உணர வில்லையா?
நான் - நிலவை எழுதுகையில்
உன் - நெஞ்சை எழுதுகிறேன்.
          நீ -அறிய வில்லையா?
இந்த - ஜெகத்தின் காட்சிஎலாம் காட்சிஎலாம்
உன் - முகத்தில் கண்டிடலாம்! கண்டிடலாம்!
                                                  (ஒரு-பெண்ணை)
கையில் - உன் - கையில் - நான்
கைரேகை யைக்காண வில்லை....
         காலத்தின் ரேகையை காண்கிறேன்!
“புதிதாய் - ஒரு-மனுசி - எதிர்
காலத்தின் கர்ப்பத்தில் உள்ளாள்”
         என்பதை ரேகையில் பார்க்கிறேன்!
அன்பின் அகலமென்ன?....
கடலில் அல்லஉன் கண்ணில் தானே காண்கிறேன்!
அன்பின் உயரமென்ன?....
மலையில் அல்லஉன் மனதில் தானே காண்கிறேன்!
                                                  (ஒரு - பெண்ணை)
காலை - பனித் - துளிக்கு - உன்
தூய்மையைக் கண்டு துக்கம்!
         தீக்குளிக் கும்கதிர் நெருப்பிலே!
சோலை - மலர் - பாராய் - அது
காம்புமேல் அமர்ந்த கர்வம்!- உனை
         கண்டதும் வீழ்ந்திடும் சருகிலே!
எல்லாப் பொருள்களிலும்....
இறைவன் இருப்பதாய் நம்பவில் லைநான் நாத்திகன்!
எல்லாப் பொருள்களிலும்....
நீயே இருப்பதாய் நம்புகி றேன்நான் காதலன்!
                                                  (ஒரு பெண்ணை)
மாதம் - பனி - ரெண்டு - அதை
பதிமூன் றாக பகுத்து
         வைப்பேன் அதற்கு உன் பெயரையே!
வேதம் - அவை-நான்காம் - அவை
வேண்டாம் என்று வெறுத்து
         ஓதுவேன் ஓதுவேன் உன்னையே!
மாறுதல் ஒன்றேதான்....
மாறா ததுஎனச் சொல்லுவ தில்ஒரு திருத்தமே!
காதலும் அதுபோல்தான்....
மாறா ததுஎனக் கண்டுகொண் டேன்புது அருத்தமே!
                                                  (ஒரு-பெண்ணை)

;